English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இஙகே உள்ளீர்கள்  : முகப்பு கேள்வியும் பதில்களும்
கேள்வியும் பதில்களும்

மதுபான விளக்கத்தில் வயினின் சாறு, சாறு, வயின், கள்ளு, பியர் மற்றும்
அல்கொஹொலினால் ஆக்கப் பட்ட அல்லது அடங்கியுள்ள எல்லாத் திரவங்களும அத்தோடு மதுவரிச் சட்டத்துக்கென அமைச்சர் அறிவித்தல
மூலம் மதுபானமென்று ; பிரகடனப படுத்தும் எந்த சத்தும் அடங்கும்.
ஆண்களுள் 21 வயதிற்குக் குறைந்தவர்களும் பெண்களும் பொது இடங்களில் மதுபானம் வைத்திருத்தல் தடை செய்யப் பட்டுள்ளது. 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் தனிப்பட்ட இடங்களில் சாராயம் மற்றும் கள்ளு ஆகியவற்றை வைத்திருக்கக் கூடிய அளவின் வரையறை முறையே 7.;500 லீட்டர்கள் மற்றும் 1.500 லீட்டர்கள் என மட்டுப் படுத்தப் பட்டுள்ளன.
அடிபப்படையில் ஸ்ரீ லங்காவில் மதுபானத்தைத் தயாரிப்பதும் விற்பதும் மதுவரித் திணைக் களத்தின் கண்கானிப்பில் வருவதோடு இந்தப் பிரிவுகளில் விழுகின்ற எந்த நடவடிக்கையும் அரச அனுமதி உடையதாக இருக்க வேண்டியதோடு  இவற்றிற்காக வியாபர அமைப்புகளுக்குப் பொருத்தமான பல தரப் பட்ட (45) வகையான லைஸன்ஸ்களைத் திணைக்களம் வழங்கி
ஒவ்வொரு வகைக்கும் கட்டணங்கள் குறிப்பிடப் பட்டு சில வனககளுக்குத' துணை லைஸன்ஸ்களைக் கட்டணமின்றி வழங்குகிறது.
திருப்பிக் கொடுக்கப் படாத ஒரு விண்ணப்பக் கட்டணமாக ரூபா 7500 அறவிடப் படும.
ஸ்ரீ லங்காவினுள் மதுபானத்தை எடுத்துச் செல்ல ஒரு அனுமதிச் சீட்டு இலவசமாக வழங்கப் படுவதோடு ஸ்ரீ லங்காவிற்கு இறக்குமதி செய்துள்ள சாறுகளைக் கொண்டு செல்வதற்கு குறைந்த கட்டணத்துக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப் படும்..

1. F.L/04 லைஸன்ஸ்கள( ஸூபர் மார்கட்டுகளுக்கு வழங்கப் பட்டுள்ள லைஸன்ஸ்கள உற்பட)
மு.ப. 8.00 முதல் பி.ப.9.00 வரை அல்லது மு.ப.9.00 முதல் பி.ப.9.00 வரை
2. ஸ்ரீ லங்கா சுற்றுலாச் சபையின் அங்கீகாரம் இல்லாத சாதாரன  ஹோட்டல்  லைஸன்ஸ் F.L.07/08 லைஸன்ஸ் மற்றும் ஹோட்டல் மதுபான விற்பனை நிலைய லைஸன்ஸ்
மு.ப.11.00 முதல் பி.ப. 5.00 வரை அல்லது பி.ப.2.00 முதல் பி.ப.11.00 வரை
3. ஸ்ரீ லங்காச் சுற்றுலாச் சபையினால் அங்கீகரிக்கப் பட்ட விருந்தினர் இல்லம் ஹோடல் மற்றும் ஹோட்டல் மதுபான விற்பனை நிலையம் F.L.07/08
மு.ப. 10.00 நள்ளிரவு 12.00. இரவுக் கிளப்கள் நடத்தப் படுவதாயின் ப்.ப.2.00 மணி வரை மணித்தியாலத்துக்கு ரூபா 250 வீதம் கட்டணம் செலுத்தி மேலதிக லைஸனஸ் பெற வேண்டும.
4. FL/09 களியாட்ட மதுபான விற்பனை நிலைய  லைஸன்ஸ் ( சினிமா  லைஸன்ஸ்)
மு.ப.11.00- பி.ப.1.00 வரை மற்றும் பி.ப.5.00- பிப.11.00 வரை( படம் காட்டப்படும் போது மாத்திரம்)
5. FL/11 சுற்றுலாச் சபை அங்கீகாரமில்லாத லைஸன்ஸ் உடைய (சிற்றுண்டிச் சாலைகள் ஹோட்டல்கள
மு.ப. 11.00 – பி.ப.05.00 வரை மற.றும. பி.ப.2.00- பி.ப. 10.00 வரை
6. FL/11 சுற்றுலாச் சபையினால் அங்கீகரிக்கப் பட்ட சிற்றுண்டிச் சாலைகள் ஹோட்டல்கள்.
மு.ப.11.00 – பி.ப. 05.00 வரை மற்றும் பி.ப.2.00- பி.ப. 11.00 வரை
7. FL/12 வாடி வீட்டு லைஸன்ஸ்கள்
மு.ப. 11.00- பி;ப் 05.00 வரை மற.றும. பி.ப.02.00 –பி.ப.11.00 வரை
8. FL/13 உரிமையாளர்களின. கிளப்கள்  தனிப்பட்ட கிளப்கள்
மு.ப. 11.00- பி;ப் 05.00 வரை மற.றும. பி.ப.02.00 –பி.ப.11.00 வரை
9. FL/13 அங்கத்தவர்களுக்கு மாத்திரமான கிளப்
மு.ப. 11.00- பி;ப் 05.00 வரை மற.றும. பி.ப.02.00 –பி.ப.10.00 வரை
10. FL/22 பியர்  வயின் சில்லறை விற்பனைக்கான லைஸன்ஸ்
மு.ப. 8.00- பி.ப.8.00 வரை அல்லது மு.ப.09.00 – பி.ப.09.00 வரை
11.
FL/22 ஸ்தலத்தில் பியர் வயின் அருந்துவதற்கான லைஸன்ஸ் (  சுற்றுலாச் சபையின் அங்கீகாரம் இல்லாத)
மு.ப. 11.00- பி;ப் 05.00 வரை மற.றும. பி.ப.02.00 –பி.ப.10.00 வரை
12. FL/22 ஸ்தலத்தில் பியர் வயின் அருந்துவதற்கான லைஸன்ஸ் ( சுற்றுலாச் சபையின் அங்கீகாரம உள்ள)
மு.ப. 11.00- பி;ப் 05.00 வரை மற.றும. பி.ப.02.00 –பி.ப.11.00 வரை
13. FL/05 வெளிநாட்டு மதுபானத் தவறணை  லைஸன்ஸ.  கள்ளுத் தவறணை லைஸன்ஸ.
மு.ப. 11.00- பி;ப் 05.00 வரை மற.றும. பி.ப.02.00 –பி.ப.8.00 வரை
14. FL/10 புகையிரதச் சிற்றுண்டிச் சாலை லைஸன்ஸ்
மு.ப. 11.00- பி;ப் 05.00 வரை மற.றும. பி.ப.02.00 –பி.ப.8.00 வரை

எல்லாப் பூரனச் சந்திர நாட்களிலும்( போயா) , சமய நிகழ்வுகளுக்காக் குறிக்கப் பட்ட தினங்களிலும, மதுவிலக்குத் தினங்களிலும், விசேஷ காரணங்களுக்காக அதிகாரிகளினாற் தடையெனப் பிரகடனம் செய்யப் பட்ட ஏனைய எந்த நாளிலும் போதையூட்டும் பானங்கள் விற்பனை செய்தல் தடை செய்யப் பட்டுள்ளது.
லைஸன்ஸ் விண்ணப்ப திகதிக்கு முந்திய மூன்று வருட காலத்தில் மரங்கள் இருக்கின்ற கிராமத்திலே வசித்து வந்துள்ள பொருத்தமான விண்ணப்ப தாரிகளுக்கு லைஸன்ஸ்கள் வழங்கப் படும்.

இதற்காக சமுர்தி அபிவிருத்தி அதிகாரியின் அனுசரனையுடனான பிரதேசச் செயலாளரின் அத்தாட்சிப் பத்திரமொன்று தேவைப் படும

  1. ஒருவருக்கு; ஒரு மரத்தை ஒரு முறை சீவுவதற்கு உரிமை உள்ளதுடன் ஜனவரி 1 ஆம் திகதி முதல் டிஸம்பர் 31 ஆம. திகதி வரையிலான தொடர்ந்து வரும் ஒவ்வொரு மாதத்திற்கும், ஒரு மரத்திந்கு ரூபாய். 250 வீதம் கட்டணமாக அறவிடப் படும்.
  2. மரங்கள் இருக்கின்ற தோட்டம் அல்லது தோட்டங்கள் ஒன்றாகவோ அல்லது தொடர்ச்சியாக இருக்க வேண்டியதோடு விண்ணப்பதாரி வசிக்கும் இடமாகவும் சோதனைகளுக்கும் மேற்பார்வைக்கும் இலகுவிற் சென்றடையக் கூடியதாகவும் இருத்தல் வுpரும்பத் தக்கது.
  3. ஏனைய லைஸன்ஸ் வழங்கப் பட்ட ஸ்தாபனங்களுக்கு புளித்த கள்ளு வினியோகிப்பதற்காக லைஸன்ஸ் வழங்கப் பட்டுள்ள மரங்கள் இருக்கும் தோட்டங்களிலும், பெரிதளவிற் பாரதூரமான
    குற்றச் செயல்களோ அல்லது மதுவரிக் குற்றச் செயலகளோ இடம் பெற்றுள்ள இடங்களிலும் இம்மரங்கள் இருக்கக் கூடாது.
  4. ஒருவரோ அல்லது அவரின் குடும்ப அங்கத்தவர் ஒருவரோ குற்றவியற் சட்டக் கருத்துககுற் பட்ட குற்றவாளியாகக் காணப் பட்ட ஓருவராக  அல்லது  மூன்று தடவைகளுக்குக் கூடுதலாக மதுவரிச் சட்டத்தின் கீழ் குற்றவாளியெனக் காணப் பட்டிருந்தால் அல்லது விண்ணப்பத் திகதிக்கு முந்திய இரண்டு வருட காலங்களுக்குள் அதே சட்டத்தின் கீழ்க் குற்றவாளியெனக் காணப் பட்டிருந்தால் அவர்களுக்கு லைஸன்ஸ் வழங்கப் படமாட்டாது.
  5. அவ்வாறு சீவப் பட்ட கள்ளை லைஸன்ஸ் வழங்கப் பட்ட மரம் இருக்கும் இடத்தைச் சூழ 50 மீட்டர்கள் விட்டப் பகுதியில் அருந்தவோ விற்பனை செய்யவோ முடியும். 1..500 லீட்டர்களுக்குக் கூடுதலாகக் கள்ளைக் கொண்டு செல்லப் பிரதேச மதுவரி அத்தியட்சகரிடம் ஒரு அனுமதிப் பத்திரம் பெற வேண்டும்.
  6. ஏதோ ஒரு காரணத்தினால் மரத்தினடியில் அதே தோட்டதில் கள்ளை விற்பனை செயய முடி;யாதிருந்தால் அதிகாரமுள்ள மதுவரி அத்தியட்சகர் பொருத்தமான ஒரு இடத்துக்குக் கொண்டு சென்று வைத்திருப்பதற்கு ஒரு கால அவகாசத்தை வழங்குவார.
  7. கள்ளை விற்பதற்காக லைஸன்ஸ் பெற்றுள்ளவர் 3 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமுமுள்ள ஒரு தற்காலிகக் குடிசையை அமைத்துக் கொள்ளலாம்.

விசேஷ சந்தர்ப்பங்களில. தானிய மதுபானங்களை விற்பனை செய்வதற்காக பொறுப்பு வாய்ந்த நபர்களுக்குச் சமயோசித லைஸன்ஸூகள் வழங்கப் படும்.விண்ணப்பதாரி விண்ணப்பத்தை நியாயப் படுத்துவதற்காக நிரூபனங்களையும் பின்வரும் மேலதிக ஆவனங்களையும் சமர்ப்பிக்க வேண்டும.

  1. விசேட நிகழ்வு இடம் பெறும் தளத்தின் அல்லது காணியின் உரிமையாளரின் மது பானம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பிலலை என் விசேஷமாகக் குறிப்பிடப் பட்டுள்ள விருப்புக கடிதமொன்று பெறப் படவேண்டும். அந்தத் தளம் ஒரு பாடசாலையாக இருந்தால் அதிபரிடம் ஒரு கடிதமும் அல்லது ஒரு உள்வாரி அதிகாரிக்குச் சொந்தமான ஒரு இடமாக இருந்தால் சம்பந்தப் பட்ட அதிகார சபை ஆணையாளரின் சிபாரிசுவும் வேண்டப் படும.
  2. மதுவரி அதிகாரிகளின் சிபாரிசு.
  3. இந்த லைஸன்ஸை வழங்குவதினால் சமாதானத்துக்குப் பங்கம் ஏற்படாது என்பதைக் குறிப்பிட்டுள்ள பிரதேசப. பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் வழங்கப் பட்ட ஒரு அறிக்கை.
  4. லைஸன்ஸ் காலாவதியாகி 6 வாரங்களுக்குள் வாங்கிய மதுபானத்தின் அளவு, விற்பனையினட அளவு மற்றும் ஏனைய விவரங்கள் அடங்கிய கணக்கொன்று சமர்ப்பிக்கப் பட வேண்டும். உதவி மதுவரி ஆணையாளரின் சிபாரிசுடன் பிரதேசச் செயளாளர் தான திருப்;திப் பட்ட பின் லைஸன்ஸை வழங்குவார் லைஸன்ஸைப் பெறும் போது கட்டணமாக ஒரு நாளுக்கு ரூபா 1000 ஐயம் திருப்பிக் கொடுக்கப் படாத வைப்புப் பணமாக ரூபாய 20 ஐயும் செலுத்த வேண்டும். இந.த லைஸன்ஸை வேறு எவரின் பெயருக்கும் மாற்ற முடியாது.

தளத்தின் இடத்தை மாற்றுவதற்காக சாதாரண குடுவிண்ணப்பப் படிவத்தில விண்ணப்பம் செய்வதோடு கனிசமான நிரூபனங்களைக் கொண்டு காரணத்தை நிரூபிக்க வேண்டும. நடத்திச் செல்ல உத்தேசித்துள்ள புதிய தளம்; நிலப் பரப்பு, பாடசாலை மற்றும் வணக்கத் தளங்கள்  ஆகியவைக்கிடையிலான தூரம் போன்ற அடிப்படைவேண்டுதல்களுக்கு ஒப்பானதாக இருத்தல் வேண்டும்

மதுவரி ஆணையாளர் நாயகம் விண்ணப்பஞ் செய்யப் பட்டுள்ள பிரதேசத்திற் தற்போது அத்தகைய லைஸன்ஸ்கள் வழங்கப் பட்டுள்ள தளங்களின் எண்ணிக்கையையும் கருத்திற் கொண்டு; நமபகத் தன்மையை உன்னிப்பாய ஆராய்ந்த பின்பு நகர்த்துதலை அனுமதிக்கலாம். நகர்த்துதலுக்குக் கட்டணமாக ரூபாய் 500,000 மும் மேலதிகமாக விண்ணப் படிவத்;தின விலைக்காகவும் நெறிப் படுத்தும் கட்டணமாகவும் ரூபாய் 7500 மும் அறவிடப் படும்

மாற்றத்துக்கான விண்ணப்பம் சாதாரன விண்ணப்பப் படிவத்திற் செய்யப் பட வேண்டியதோடு அதில் மாற்றத்தைப் பெறுபவரின் எல்லா அறிக.கைகளும் சமர்ப்பிக்கப் பட வேண்டும். ஒரு மதுவரி லைஸன்ஸூக்கு விண்ணப்பிக்கும் போது வழமையான அறிக்கைகளுக்குப் புறம்பாக  இந்தத் தலைப்பிற் பின்பற்றப் பட வேண்டியதும் விளக்கத்திற் தரப்பட்டுள்ளதுமான வேண்டுதல்களின் பிரகாரம் விவரங்கள் அடங்கிய, மாற்றுபவரினதும் மாற்றம் பெறுபவரினதும்சத்தியக் கடுதாசிகளும்; சமர்ப்பிக்கப் பட வேண்டும்.
2004 ஆம. ஆண்டில். மதுவரித் திணைக் களம் பெற்ற மொத்த அரச வருமானம் ரூபாய 13,545.00 மிலியன்களாக இருந்தது. 2003 ஆம. வருடத்திற் சம்பாதித்த அரச வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது ஒரு 21மூ அதிகரிப்பாகும். கடந்த சில வருடங்களில் சமமான ஒரு உயர்ச்சியைக் காணக் கூடியதாக இருந்தது.
தற்போது மதுவரி லைஸன்ஸ்கள் மூன்று வருட காலங்களுக்குப் புதுப்பிக்கப் படுவதோடு லைஸன்ஸ் உரிமையாளர் வருடாந்தம் புதுப்பித்தலையும் தெரிவு செய்யலாம. ஒரு விண்ணப்பதாரி ஒரு மதுவரி லைஸன்ஸூக்கு விண்ணப்பிக்கும் போது பின்பற்ற வேணடிய வழிமுறைகள் விவரக் கோவையில் விளக்கிக் கூறப் பட்டுள்ளன.
மதுவரிச் சட்டத்தின் கீழ் வழககுத் தொடரக் கூடிய குற்றங்களுக்கு உச்ச அபராதமாக ரூபாய் 100.000 அல்லது ஒரு வருடம் வரை நீடிக்கக் கூடிய சிறைத் தண்டனையாகவும் அந்தக் குற்றத்தை மீண்டும் செய்யும் போது குற்றவாளி எனக் காணப் பட்டால் குற்றம் தொடருகின்ற ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 10,000 வீதம அபராதம் விதிக்கப் படும.
மதுவரி லைஸன்ஸ் உரிமையாளர்களினாற் செய்யப் படும் குற்றச் செயல்கள் லைஸன்ஸின் நிபந்தனைகளை மீறுதல் என்ற வரம்புக்கு உற்படுவதால் குற்றச் செயலின் பாரதூரத்தின் படி ஒன்று திரட்டிய அபராதமாக ரூபாய் 500,000 வரை நீடிக்கக் கூடிய ஒரு அபராதத்தை விதிப்பதற்குச் மதுவரி ஆணையாளர் நாயகத்துக்கு சட்ட அனுமதி உண்டு..குற்றச் செயல் அதற்கும் மேலான தண்டனை யொன்றை விதிக்க வேண்டியதொன்றாய் இருந்தால் லைஸன்ஸை இடை நிறுத்த அல்லது இரத்துச் செய்யவும் முடியும்..
திறந்த வியாபாரக் கொள்கையின் பிரகாரம் மதுபானங்களின் விலைகள் நிலையானவையல்ல. எவ்வாறிருப்பினும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் போத்தலின் ஒட்டுச் சீடடிடலே விற்கும் விலையைக் குறிக்க வேண்டியதோடு, நேரடி விற்பனைக்கென அல்லது தளத்திலேயே அருந்துவதற்கெனவுள்ள லைஸன்ஸ் வழங்கப் பட்ட ஸ்தாபனங்களில் விற்பனை விலைகள் பார்;வைக்கு வைககப் பட வேண்டும.
எல்லா மதுபான உற்பத்திச் சாலைகளினதும் நடவடிக்கைகளை. பலம் மற்றும் தரத்தை உறுதி செய்து கொளவதறகாக மதுவரி எத்தியோகத்தர்கள் அவதானித்து வருவதோடு, அரசாங்கப் பகுப்பாய்வாளர்;களினால் மதுபானங்களின் மாதிரிகள் அடிக்கடி பரிசோதனை செய்யப் படுகின்றன..
கஞ்சாவை வைத்திருத்ல் பதிவு செய்யப் பட்ட நுகர்வோர்களுக்கும் பதிவு செய்யப் பட்ட உள்நாட்டு வைத்தியர்களுக்கும்(வெதரால) அவர்களின் நோயாளிகளுக்கும் மாத்திரம் மட்டுப் படுத்தப் பட்டுள்ளது. பதிவு செய்யப் பட்ட நுகர்வோர்கள் அவர்களுக்கு வைத்தியரினாற் நியமிக்கப்பட்டுள்ள அளவில் ஐந்து வாரங்களுக்குப் போதிய தேவையை வைத்திருக்க முடியுமாவதுடன் உள்நாட்டு வைத்தியர்கள் அவருக்கு நியமிக்கப் பட்ட அளவில் எட்டு மாதங்களுக்குப் போதிய அளவை வைத்திருக்க உரிமை பெறுவதோடு அவரின் எந்த ஒரு நோயாளரும் மூன்று நாட்களுக்குப் போதிய மருந்துத் தயாரிப்புக்குப் போதிய கஞ்சாவை வைத்திருக்க முடியும்.
கருத்தாவது கஞ்சா மற்றும் அபாயகரமான போதைப் பொருட்கள்; சட்டம் அமுலுக்கு வந்த தினத்தன்று நுகர்பவராக இருந்த ஒருவர் 1910 ன் கஞ்சாச் சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப் பட்டவராவார்.
அது சிகரட், சுருட்டு, பீடி, சிகரட்டிற்குப் பதிலாகப் பிரயோகிக்கும் பொருட்கள் மற்றும் குழாய்ப் புகையிலை உற்பத்திகளுக்கு அறவிடப் படும் வரியாகும்.
ஒரு மாஜிஸ்டிரேட்; கோட்டில் விசாரணையின் பின் குற்றவாளியெனக் காணப் பட்ட ஒருவர் ரூபாய் ஒரு மிலியனுக்குக கூடாத ஒரு அபராதத்தையோ அல்லது 6 மாத காலத்துக்குக் கூடாத சிறைத் தண்டனையையோ பெறலாம். சம்பந்தப் பட்ட அமைச்சின் காரியதரிசி அல்லது மதுவரி ஆணையாளர் நாயகம் இநத விதமான குற்றச் செயல்களைத் திரட்டி ஒரு ஒன்றிணைக்கப்பட்ட அபராதத்தை விதிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ளனர்.
அரசாங்கத்தின் அதிஉயர்ந்த அரச வருமானத்தை உழைக்கும் திணை;களங்களுள் ஒன்றாக இருப்பதோடு அல்கொஹொல் சக்தி குறைவானதும் கடின மதுபானத்தை விடக் குறைவான விலையில் விற்பனையாகும் தானிய மதுபானத்தை உயர்த்தியும் ஊக்கப் படுத்தியும் அத்தோடு சந்தைக்குச் சட்ட விரோதமாக வடிக்கப் படும் மதுபானங்கள் வருவதை எதிர்த்துப் போராடுவதற்காக மதுவரிச் சட்டங்களை கடுமையாக அமுல் படுத்தியும் பொது மக்களின் அபிவிருத்தி, நலன்கள் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொள்கையாகக் கொண்டு செயலாற்றுவதில்; ஈடுபட்டுள்ளது.
தரப் படுத்தப் பட்ட கணக்கு வைப்புப் புத்தகங்கள் மதுவரி லைஸன்ஸ் உரிமையாளர்களுக்கு மதுவரித் திணைக் களத்தினால் வழங்கப் பட்டுள்ளதோடு மதுவரி வெளிக்கள உத்தியோகத்தர்களினாற் கணக்குகளைப் பதிவு செய்வதற்குத் தேவையான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.தளத்திலே உட்கொள்வதற்குரிய நிலையங்களுக்கான லைஸன்ஸ் உரிமையாளர்களுக்கு தரப் படுத்தப் பட்ட அளவைகளும் வழங்கப் பட்டுள்ளன. மதுவரி உத்தியோகத்தர்களினால். அடிக்கடி சோதனைகள் செய்யப் படுவதோடு தவறிழைக்கும் லைஸன்ஸ் உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் படுகிறது.

 

மேற்பார்வை கைது செய்தல்

விளம்பரங்கள்

தற்போது விளம்பரங்கள் எதுவுமில்லை