English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இஙகே உள்ளீர்கள்  : முகப்பு
தெற்கில் மதுவரி அதிகாரிகளினால் 4 சட்டவிரோத மதுபாண வடிசாலைகள் முற்றுகையிடப் பட்டன.
Tuesday, 09 March 2010 21:21

தெற்குப் பிராந்தியத்திற் பல பகுதிகளுக்குச் சட்ட விரோத மதுபாணம் வினியோகம் செய்து வந்த 4 பெரிதளவிலான மதுபாண உற்பத்தி சாலைகளின் ரூபாய் 5 லட்சமளவு பெறுமதியான ஒரு தொகை மதுபாணத்தைக் கைப்பற்றுவதில் தங்காலை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் வெற்றி கண்டுள்ளனர்.

அனுமதிப் பத்திரமின்றி பியர் விற்பனை செய்த 7 சிற்றுண்டிச் சாலைகளும் சுற்றி வளைக்கப் பட்டதாக தங்காலை மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி திரு. தீர குணசேகர தெரிவித்தார்.

இந்த மதுபாண வியாபாரங்களுக்கு தலைமைத்துவங் கொடுத்த 16 சந்தேக நபர்களும்  மதுவரித் திணைக்கள அதிகாரிகளினாற் கைது செய்யப் பட்டுள்ளனர்.

17000 மி;ல்லி லீட்டர்களைக் கொண்ட ஒரு தொகை சட்ட விரோத மதுபாணம்   580,000 மில்லி லீட்டர் கோடா ஒரு தொகை செம்புச் சுருள்கள் உற்பட 15 பீப்பாய்கள் அங்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகளினாற் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தங்காலை  ஹக்குறுவெல வலஸ்முல்ல அங்குனுகொலபெலஸ்ஸ புஸ்வௌ ஆகிய பிரதேசங்களில் இந்த முற்றுகைகள் இடம் பெற்றுள்ளன.

சந்தேக நபர்கள் தங்காலை வலஸ்முல்லை ஹம்பாந்தோட்டை ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

தென்மாகாண உதவி மதுவரிக் கமிஷனர் திரு. பீ. ஏ. தயாரத்ன மதுவரி அதிகாரி திரு விஜித கமனாயக ஆகியோரின் அறிவுரை மற்றும் மேற்பார்வையுடன் நிலையப் பொறுப்பதிகாரி திரு தீர குணசேகரா மற்றும பரீட்சகர் திரு எச். கே. தேசப்பிரிய ஆகியோரின் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட முற்றுகையில் மதுவரிக் காவலர்;களான சமரனாயக (159) அரனாயக (652) ஜயவர்தன (681) இந்திக (698) ஹர்ஷ (828) வனிகஸேகர (1003) மதுவரிச் சாரதி ஏ. டப்ளியு. டப்ளியு. பலியவடன ஆகியோரும் அடங்கி இருந்தனர்.

( மார்ச் 2010 )

 

மேற்பார்வை கைது செய்தல்

விளம்பரங்கள்

தற்போது விளம்பரங்கள் எதுவுமில்லை