தூர நோக்கு
சட்ட விரோத மதுபானம் மற்றும் போதைப் பொருட்களிலிருந்து விடுபட்ட ஆரோக்கியமான சமூகத்தை ஸ்ரீ லங்காவிற் கட்டியெழுப்பவதாகும்.
சேவை
சமூகத்தின் அபிவிருத்திக்காகவும் நலன்களுக்காகவும் அரச வருமானத்தைச் சேகரித்தல் மற்றும் சட்டவீரோத உற்பத்தி மற்றும் அவ்வாறான உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தலைத் தடுத்தல் ஆகியவற்றினூடாக ஸ்ரீ லங்காவில் மதுபானம் மற்றும் புகையிலைக் கைத்தொழிலை திறமையாகவும் பயனளிக்கக கூடியதாகவும் பரிபாலனஞ் செய்தலும், ஸ்ரீ லங்காவில் சமூக பாதுகாப்புக்காக விஷப் பொருட்கள், கஞ்சா, அபாயகரமான போதைப் பொருட்கள் சட்டத்தை அமுல் நடத்துவதுமாகும்
நோக்கங்கள்
- மதுபானம் மற்றும் புகையிலையிலிருந்து அரச வருமானத்தைச் சேகரித்தலும் பாதுகாத்தலும்
- மதுவரிச் சட்டத்தையும் புகையிலை வரிச் சட்டத்தையும் அமுலாக்குதல்
- விஷப் பொருட்கள், கஞ்சா, அபாயகரமான போதைப் பொருட்கள் சட்டத்தை அமுலாக்குதல்
- புகையிலை மற்றும் அல்கொஹொல் மீதான தேசீய அதிகாரச் சட்டத்தை அமுலாக்குதல்