போதைப் பொருட் கிளை
விஷப் பொருட்கள் கஞ்சா மற்றும் அபாயகரமான போதைப் பொருட்கள் சட்டத்தின் கீழ்ச் சட்டத்தை அமுலாக்குவதற்காக மதுவரி போதைப் பொருட் சட்ட அமுலாக்கல் அலகு நிறுவப் பட்டது.
விசேட நடவடிக்கைச் சபை ( ளு.ழு.டீ. )
இந்த அலகானது பொது மக்களிடமிருந்து மதுவரி ஆணையாளருக்குக் கிடைக்கும் குற்றச் சாட்டுகளை விசாரணை செய்து எல்லா மதுவரிக் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான பொறுப்பை ஏற்கின்றது.
- கொழும்பு அலகு
- மத்திய மாகாண அலகு
- தென் மாகாண அலகு
- வட மேல் மாகாண அலகு
தயாரிப்புச் செயற்பாட்டு அலகு ( ஆ.ழு.ரு.)
இந்த அலகின் முக்கிய செயற்பாடுகளாவன, வடி சாலைகளையும் மதுபான உற்பத்திச் சாலைகளையும் கள்ளு மற்றும் வயின் உற்பத்திச் சாலைகளையும் தீப வியாப்தமாக உள்ள லைசன்ஸ் வழங்கப் பட்ட மது பான மொத்த விற்பனை நிலையங்களையும் (கு.டு.03) மேற்பார்வை செய்து மதுவரி அரச வருமானத்தைச் சேகரிப்பதாகும்.இந்த அலகைச் சார்ந்த அதிகாரிகள் சீரான முறையில் இந்த இடங்களைச் சோதனையிட்டு இந்த இடங்களில் அவர்கள் ஏதாவது குற்றச் செயல்களைக் கண்டாற் தொழில் நுட்பக் குற்ற அறிக்கைகளைச் சமர்ப்பிப்பார்கள். மேலும் அவர்கள் இந்த நிறுவனங்களுக்கு மதுவரிச் சட்டங்கள் மற்றும் விதிகள் தொடர்பாய் ஆலோசனைகளை வழங்கி அவற்றை நெருங்கிய மேற்பார்வையில் வைத்திருக்கும்.